2008-11-26 15:59:52

வகுப்பறைகளில் திருச்சிலுவைகளை அகற்ற வேண்டுமென்ற தீர்மானத்திற்குக் கண்டனம்


நவ.26.,2008. ஸ்பெயின் நாட்டு வகுப்பறைகளில் திருச்சிலுவைகள் தொங்கவிடப்படுவதை அந்நாட்டு நீதிபதி ஒருவர் தடை செய்து தீர்ப்பு வழங்கியிருப்பது குறித்து அந்நாட்டு கர்தினால் அந்தோணியோ கனிசாரெஸ் லோவேரா கண்டனம் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தின் இத்தீர்ப்பானது கிறிஸ்தவத்திற்குப் பயப்படுவதாக இருக்கின்றது என்ற அவர், கடவுளையும் மனிதனையும் புறக்கணிக்கும் புதிய கலாச்சாரத்தைப் புகுத்துவதற்கான முயற்சி என்றும் குறை கூறினார்.

வகுப்பறைச் சுவர்களில் தொங்கவிடப்பட்டுள்ள திருச்சிலுவைகள் நாட்டின் சமய சார்பற்ற தன்மைக்கு எதிராக இருக்கின்றது என்று சொல்லி அவற்றை அகற்றுமாறு நீதிபதி ஒருவர் தீர்ப்பளித்துள்ளார்.

இது குறித்துப் பேசிய செவில்லெ பேராயர் கார்லோஸ் அமிகோ, சமய அடையாளங்களை அகற்றுவது முக்கியமல்ல, மாறாக மக்கள் எல்லா மதத்தவரையும் மதித்து நடப்பதற்குக் கற்று கொடுக்கப்பட வேண்டும் என்றார்.








All the contents on this site are copyrighted ©.