பிரிட்டனில் பலகாலம் வாழும் குடியேற்றதாரருக்கு பிரிட்டன் குடியுரிமை வழங்க அழைப்பு -
கர்தினால் ஒக்கானோர்
நவ.24,2008. பிரிட்டனில் பலகாலம் வாழும் குடியேற்றதாரருக்கு பிரிட்டன் குடியுரிமை வழங்கப்படுமாறு
அந்நாட்டு கர்தினால் கோர்மாக் மர்ப்பி ஒக்கானோர் அழைப்புவிடுத்தார் பிபிசியில் பேசிய
கர்தினால் ஒக்கானோர், குடியேற்றதாரரால் அந்நாட்டுக்கு ஏற்படும் நன்மைகளைப் பாராட்ட வேண்டும்
என்றும் குடியேற்றதாரரை வரவேற்பதற்கு அரசுக்கு பொறுப்பு உள்ளது என்றும் கூறினார்.
பிரிட்டனில்
சட்டத்துக்குப் புறம்பே குடியேறியுள்ள ஏறத்தாழ ஏழு இலட்சம் பேருக்கு மன்னிப்பு வழங்கும்
திட்டம் குறித்து இலண்டன் மேயர் போரிஸ் ஜான்சன் அரிவித்ததைத் தொடர்ந்து கர்தினால் ஒக்கானோர்
இவ்வாறு கூறினார்.