2008-11-24 15:02:11

நவம்பர் 25 - அலெக்சாண்டிரியா நகர் புனித காத்ரீன்


புனித காத்ரீன் 4ம் நூற்றாண்டில் அலெக்சாண்டிரியா நகரில் உயர் குடும்பத்தில் பிறந்தவர். அன்னைமரியாவைக் காட்சி கண்டதன் மூலமாக மனமாற்றம் அடைந்தவர். நகரில் கிறிஸ்தவர்களுக்கு எதிராகக் கலகம் எழுந்த சமயம் மன்னனிடம் தத்துவ ஞானத்துடன் காத்ரீன் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் வாயடைத்துப் போனார். வெற்றி காத்ரீனுக்கே என்று புகழ்ந்த அறிஞர்களைத் தீயிலிட்டுக் கொளுத்தினான் அவன். காத்ரீனின் அறிவைக் கண்டு வியந்த மன்னன் அவளை மணந்து கொள்ளத் துடித்தான். இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்த காத்ரீன் சிறையில் அடைக்கப்பட்டாள். காத்ரீனின் சிறைவாழ்வில் மன்னனின் மனைவி பாஸ்டீனாவும் அரச மேலவை அதிகாரி ஒருவரும் கிறிஸ்தவ விசுவாச ஒளியைப் பெற்றனர். இதனால் காத்ரீனை இரும்பு ஆணிகளைக் கொண்ட ஒரு சக்கரத்தில் வைத்துக் கொல்லச் சொன்னான் அரசன். அவள் அதில் வைத்துச் சுற்றப்பட்ட போது அவளைப் பிணைத்திருந்த கம்பிகள் அறுந்து விழுந்து அதனை வேடிக்கை பார்க்க வந்தவர்களின் உயிரைக் காவு கொண்டது. இதனால் வெகுண்டெழுந்த அரசன், காத்ரீனைத் தலையை வெட்டிக் கொல்லச் செய்தான். இவளது தூய உடலை வான தூதர்கள் சீனாய் மலைக்கு எடுத்துச் சென்றதாக ஒரு வரலாறு கூறுகிறது.

சிந்தனைக்கு – இடுக்கமான வாயிலே மிடுக்கான வாழ்வுக்கு வழி.








All the contents on this site are copyrighted ©.