2008-11-24 15:59:32

ஜப்பான், கியூப மக்களுக்கு திருத்தந்தை செபம்


நவ.24,2008. ஜப்பானிலும் கியூபாவிலும் இடம் பெறும் முத்திப்பேறு பெற்ற நிகழ்வுகளை நினைவுபடுத்தி அந்நாடுகளின் விசுவாசிகளுக்காகச் செபிப்பதாக திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.

ஜப்பானின் நாகசாகியில் 17ம் நூற்றாண்டில் கொல்லப்பட்ட 188 மறைசாட்சிகள் இன்று முத்திப் பேறு பெற்ற நிலைக்கு உயர்த்தப்பட்டனர்.

கியூபாவில் வருகிற சனிக்கிழமையன்று புனித இறையோவான் மருத்துவசபையைச் சேர்ந்த துறவி ஹோசே ஒலாலோ வால்டெஸ் என்பவர் முத்திப் பேறு பெற்றவர் என்று அறிவிக்கப்படுவார்.

கியூப மக்களை, குறிப்பாக நோயாளிகள் மற்றும் நலப்பணியாளர்களை இறைவனின் பாதுகாப்பில் அற்ப்பணிப்பதாகக் கூறினார் திருத்தந்தை.

இந்த முத்திப்பேறு பெற்ற திருப்பலி அன்றைய நாளில் அந்நாட்டுத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.