2008-11-24 15:58:17

1930 களில் உக்ரேய்னில் ஏற்பட்ட கடும் பஞ்சத்தின் பேரிழப்புக்களை நினைவு கூர்ந்தார் திருத்தந்தை


நவ.24,2008. 1930 களில் ஏற்பட்ட பஞ்சத்தில் முன்னாள் சோவியத் யூனியனின் உக்ரேய்னில் இலட்சக்கணக்காண உயிர்கள் காவு கொள்ளப்பட்டதை நினைவு கூர்ந்தார் திருத்தந்தை.

1932க்கும் 1933க்கும் இடைப்பட்ட காலத்தில் கம்யூனிச ஆட்சி காலத்தில் உக்ரேய்னிலும் பிற சோவியத் யூனியன் நாடுகளிலும் ஏற்பட்ட கடும் பஞ்சத்தில் இலட்சக்கணக்காண உயிர்கள் இறந்த 75ம் ஆண்டு நினைவு கூரப்பட்டதை முன்னிட்டு மூவேளை செப உரையின் இறுதியில் திருத்தந்தையும் அதனை நினைவு கூர்ந்தார்.

ஹோலோடோமோர் அதாவது பசியினால் ஏற்பட்ட இறப்பு என்ற தலைப்பில் இது நினைவு கூரப்படுகிறது.

இப்பசிச் சாவுகளுக்கு சோவியத் சர்வாதிகாரி ஜோசப் ஸ்டாலினின் அரசியல் கொள்கைகளே காரணம் என்று குறைகூறப்படுகிறது







All the contents on this site are copyrighted ©.