2008-11-23 20:30:05

ஆன்மாவை இழந்துவிடாதே ! வத்திக்கானின் செய்தித்தொடர்பாளர்.231108.


ஆன்மீக வாழ்வினுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என வத்திக்கான் திருப்பீடச் செய்தித் தொடர்பாளர் அருள்தந்தை பெடரிக்கோ லொம்பார்டி சென்ற வார இறுதியில் செய்தி வழங்கினார் . உள் மனதை , ஆன்மீக வாழ்வை வறண்டுவிடாது காக்க வேண்டும் எனக் கூறியுள்ளார் . இம்மாதம் திருத்தந்தையின் முக்கியக் கருத்தாக தனித்திருந்து செபிப்போருக்காக மன்றாடுகிறோம் . நாம் உயிர் வாழ சுவாசிப்பது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு அவசியம் தியானமும் செபவாழ்வும் . தொலைபேசிகளும் , கணிணியும் வளர்நதுவிட்ட இக்காலத்தில், மெளனமாக இருப்பது சிரமமாக இருக்கலாம் . இறைப்பற்றுள்ளோருக்கு செபம் , இறைவனோடு தனித்திருந்து பேசுவது ,தூய ஆவியின் குரலுக்குச் செவிமடுப்பது என்பது உடலை நலமாக வைத்துக் கொள்ள நாம் எடுக்கும் முயற்சிகளைவிட மிக முக்கியமானதாகும். உடலைக் கொல்வோருக்கு அஞ்சவேண்டாம் . ஆன்மாவை அழிக்க வல்ல தீய சக்திகளுக்கு அஞ்சுங்கள் எனக் கூறியுள்ளார் இயேசு. தியானமும் , செபமும் திருச்சபைக்கும் அவசியம் . ஆன்மீகத்துறையின் வித்தகர்கள் இது பற்றித் தெளிவுபடக் கூறியுள்ளார்கள். ஆன்ம நலம் காப்பது அவசியம் . இல்லையேல் அது மிகப்பெரிய இழப்பைத் தரும். தனித்திருந்து செபிக்கும் அனைவருக்காகவும் இம்மாதம் செபிக்க அழைக்கப்பட்டுள்ள நாம், நமது ஆன்மாவையும் பாதுகாத்திட வேண்டும் எனத் தந்தை பெடரிக்கோ லொம்பார்டி கூறியுள்ளார் .








All the contents on this site are copyrighted ©.