2008-11-22 19:57:01

புனித மைக்கிள் புரோ , குரு, மெக்சிக்கோ நாட்டு மறைசாட்சி . இயேசு சபைத் துறவி .கி.பி. 1891-1927.


தமது நெஞ்சைக் குண்டுகள் துளைத்தபோது “கிறிஸ்து அரசரே வாழ்க” என்று சொல்லி தம் உயிரை நீத்தவர் புனித மைக்கிள் புரோ . இவர் இயேசு சபையில் சேர்ந்த நாட்களில் மெக்சிக்கோவிலும் அதன் சுற்றுப்புரங்களிலும் கத்தோலிக்க மறைக்குக் கொந்தளிப்பான காலமாக இருந்தது. இயேசு சபையில் சேர்ந்த இவர் தொடக்க முதல் ஒரு புனிதராக வாழ வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்பட்டார் .பல இன்னல்களுக்கும் , வேதனையான பயணங்களுக்கும் பின் பெல்ஜிய நாட்டில் லூவெயின் நகரில் மறையியல் கற்றார் . கி.பி. 1925 இல் குருப்பட்டம் பெற்றார் .தாயகம் திரும்பினார் . மெக்சிக்கோவில் திருச்சபையின் நிலைமை மோசமாகியிருந்தது . இருப்பினும் மறைந்து வாழ்ந்த கத்தோலிக்கர்களிடம் இடம் அறிந்து மறைவாகச் சென்று அருள்சாதனங்களை வழங்கி கிறிஸ்தவர்களைப் பல வகைகளிலும் புரோ ஊக்குவித்து வந்தார் .இவரது உடன்பிறந்த சகோதரர்கள் ஹம்பர்ட் , ராபர்ட் இருவரும் தந்தை புரோவுக்கு வலக்கையாக அமைந்து உதவினர் .



நவம்பர் 23 , 1927 இல் இவரை போர்வீரர் சுடுவதற்குத் தயாரானபோது இவர் செபித்துக் கொண்டே ,புன்முறுவலுடன் தம் இரண்டு கைகளையும் சிலுவை அடையாளமாக விரித்து வைத்த நேரம் குண்டு அவரது இதயத்தைத் துளைத்தது. சாவினை சிரித்துக் கொண்டே வரவேற்றவர் தூய மைக்கிள் புரோ.








All the contents on this site are copyrighted ©.