2008-11-22 14:39:37

நிக்கராகுவாவில் அமைதிக்கும் மறு வாக்கு எண்ணிக்கைக்கும் ஆயர்கள் அழைப்பு


நவ.22,2008. நிக்கராகுவாவில் இடம் பெற்ற நகரசபைத் தேர்தல்கள் முடிவுகள் அண்மை வனமுறைப் போராட்டங்களுக்குக் காரணம் என்று கூறும் அதேவேளை ஆயர்கள் அமைதிக்கும் மறு வாக்கு எண்ணிக்கைக்கும் அழைப்புவிடுத்தனர்.

நவம்பர் 9ம் தேதி நடை பெற்ற நகரசபைத் தேர்தல் முடிவுகள் அந்நாட்டு அரசுத்தலைவர் டானியேல் ஒர்த்தேகாவின் ஆதரவாளர்களுக்குச் சாதகமாக இருக்கின்றன. இந்நிலையில் இத்தேர்தலில் ஊழல் நடமாடியுள்ளது என்று மக்கள் உணர்வதாக மானாகுவா பேராயர் லியோபோல்டு பிரேனெஸ் சோலோர்சானோ தெரிவித்தார்.

கிறிஸ்து அரசர் பெருவிழாவான இஞ்ஞாயிறன்று அமைதி ஊர்வலம் நடத்தவும் திருச்சபைத் தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இலத்தீன் அமெரிக்காவில் பிற இடதுசாரி தலைவர்கள் போல் இல்லாமல் டானியேல் ஒர்த்தேகா தனது அரசுத் தலைவர் பணியைக் கத்தோலிக்கத் திருச்சபையோடு நல்லுறவில் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.