2008-11-22 20:28:47

ஒரிசா - கிறிஸ்தவர்களைக் கொல்வதற்குப் பரிசுகள்.22, நவம்பர்,08.


ஒரிசாவில் கிறிஸ்துவர்களைக் கொல்வதற்கு இந்துத் தீவிரவாதிகள் பணம் , துணிமணிகள் , மதுபானம் , மற்றும் பல பொருட்களைப் ஊக்கப் பரிசாக வழங்குகவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன .வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்க உள்துறை அமைச்சர் சிவராஜ் பட்டேல் சிறப்புக் காவல் படையை உருவாக்கியுள்ளார் . தீவிர வாதக் கும்பலுக்கு உதவிட மகளிரும் தேர்வு செய்யப்பட்டு வன்முறையில் இறங்க ஊக்குவிக்கப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன . அவர்களுக்கு வாள்களைப் பயன்படுத்தவும் , தடி கொண்டு தாக்கவும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது . கிறிஸ்தவத் தலைவர்களைக் கொல்லவும் , கிறிஸ்தவர்களுக்குச் சொந்தமான பொருட்களைச் அழிக்கவும் , கிறிஸ்தவ தேவாலயங்களைத் தீ வைத்து எரிக்கவும் இவர்கள் தூண்டப்படுகிறார்கள். நாட்டையே உலுக்கிய ஒரிசா வன்முறையை ஒடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது . உள்துறை அமைச்சர் சிவராஜ் பட்டேல் சிறப்புக் காவல் படையால் மட்டுமே கேரளா, கர்நாடகம் , ஒரிசாவில் நடந்துவரும் வன்முறையைத் தடுத்து நிறுத்த பாதுகாப்புத் தரமுடியும் என காவல் அதிகாரிகளோடு கலந்து ஆலோசித்துள்ளார் . அகில இந்தியக் கிறிஸ்தவ மன்றத்தின் செய்திப்படி கிறிஸ்தவக் குருமார்களைக் கொல்வதற்கு 12,000 ரூபாயும் , மேலும் உணவு , எரிபொருள் எண்ணை மற்றும் மதுபானங்களும் அளிக்கப்படுவதாகத் தெரிகிறது . ஒரிசாக் கிறிஸ்தவர்களை முற்றிலும் அழித்திட விஷ்வ இந்து பரீஷத் , பஜ்ரங்தால் போன்ற தீவிரவாத இயக்கங்கள் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.