2008-11-21 19:06:22

பாவமன்னிப்புப் பற்றிய திருத்தந்தையின் கருத்தை வரவேற்கிறார் உரோமையின் லூத்தரன் சபைத் தலைவர் . 211108.


திருத்தந்தை இவ்வாரப் புதன் மறைபோதகத்தின்போது லூத்தர் பயன்படுத்திய வார்த்தைகளைப் பயன்படுத்தி விளக்கம் அளித்தார் . லூத்தர் இறைப்பற்று ஒன்றே போதும் ,செயல்கள் தேவையில்லை , அந்நம்பிக்கையால் நாம் மீட்புப் பெறுவோம் எனக் கூறியிருந்தார் . திருத்தந்தை கொடுத்த விளக்கத்தில் இறைப்பற்று என்பது பிறரன்புக்கு எதிராக இருக்கக் கூடாது . அன்பைப் பரிமாறுவதாக இருக்கவேண்டும் . விசுவாசம் அல்லது இறைப்பற்று கிறிஸ்துவை உற்று நோக்கி , அவரிடம் நம்மை ஒப்படைத்து , அவரோடு இணைந்து , அவர் காட்டும் வழியில் வாழ்வதாகும் எனத் திருத்தந்தை விளக்கமளித்தார் . கிறிஸ்துவில் நம்பிக்கை என்பது அவராக நாம் உருமாற்றம் பெற்று அன்பு மயமாவது என்றார் திருத்தந்தை . உரோமையின் லூத்தரன் திருச்சபையின் தலைவர் ஹோல்கர் மில்கோ இதுபற்றிப் பாராட்டிக் கூறுகையில் , திருத்தந்தை லூத்தரைப்பற்றிப் பேசும்போதெல்லாம் , நல்ல கருதுக்களை முன் வைப்பதால் கேட்பது மிக்க மகிழ்ச்சி தருவது எனக் கூறினார் . 1999 ஆம் ஆண்டு கத்தோலிக்கத் திருச்சபையும் , லூத்தரன் திருச்சபையும் பாவமன்னிப்பு , மற்றும் இறைவனுக்கு ஏற்புடைமை பற்றி கருத்து ஒன்றித்து ஒரே நம்பிக்கைக்கான அறிக்கை வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.