2008-11-21 19:13:49

குடியேற்றதாரர்கள் ,மற்றும் புலம்பெயர்வோர் பற்றி கருத்தரங்கில் கருத்துப்பரிமாறினார் பேராயர் அகஸ்தீனோ மார்க்கெட்டோ . 211108 .


புலம்பெயர்வோர் , குடியேற்றதார்கள் , மற்றும் வெளிநாடுகளில் இருந்து கல்வி பயிலவரும் மாணவர்கள் பற்றிய கருத்தரங்கு இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் நடக்கிறது . அங்கு உரை நிகழ்த்திய வத்திக்கான் திருப்பீடத்தின் குடியேற்றதாரர்கள் மற்றும் புகலிடம் தேடுவோருக்கான மன்றத்தின் தலைவர் பேராயர் அகஸ்தீனோ மார்க்கெட்டோ பேசுகையில் 2 கோடிக்கும் மேற்பட்டோர் இன்று புலம்பெயர்ந்துள்ளார்கள் . இது சமுதாயத்தின் அமைப்பையே மாற்றுகிறது , பல தரப்பட்ட சமூக , கலாச்சார , அரசியல் , பொருளாதார, சமய, ரீதியில் பாதிப்பை ஏற்படுத்துகிறது . அம்மக்களுக்கு உதவிசெய்திடுவது நமது கடமையாக அமைகிறது என்றார் . இதுபற்றித் தெளிவுற பல கோணங்களில் விளக்கிக்கூறிய பேராயர் மார்க்கெட்டோ , புலம் பெயரும் மக்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுப்பது திருச்சபையின் பிறர் அன்புச் சேவை எனக் கூறினார் . இதை 1981 இல் முந்நாள் திருத்தந்தை 2 ஆம் ஜான்பால் திருச்சபையின் முக்கியப் பணி எனத் தெரிவித்ததை மேற்கோள் காட்டினார் . அவர்களுடைய பொருளாதாரப் பிரச்சனையையும் ,ஆன்மீகத் தேவைகளையும் கருத்தில் கொள்ளவேண்டும் எனத் திருத்தந்தை 2ஆம் ஜான்பால் கூறியிருந்தார் . எனவே இரண்டையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும் என்றார் பேராயர் அகஸ்தீனோ மார்க்கெட்டோ .








All the contents on this site are copyrighted ©.