2008-11-20 20:14:25

சூரிய ஒளியில் மின் சக்தி தயாரிக்கிறது வத்திக்கான் .20,நவம்பர் ,08.


இம்மாதம் 26 ஆம் தேதி , காலை 11.30 மணியளவில் வத்திக்கானின் திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கமும் , மற்றுமுள்ள வத்திக்கான் கட்டிடங்களும் சூரிய ஒளியிலிருந்து தயாரிக்கப்படும் மின் சக்தியால் இயங்க உள்ளதாக வத்திக்கான் செய்திச் சேவை இந்த வியாழன் தெரிவித்தது . திருத்தந்தை 4 ஆவது பயஸின் மாளிகை வத்திக்கான் தோட்டத்தில் உள்ளது . அங்கு வத்திக்கான் திருப்பீட அறிவியல் கழகம் இயங்கிவருகிறது . அங்கு தொடக்க விழா நடக்கவுள்ளது . தயாரிக்கப்படும் மின்சக்தி 221 கிலோ வாட் திறன் கொண்டது . ஆண்டொன்றுக்கு 300 மெகா வாட் மின் சக்தி பெறப்படும் எனத் தெரிகிறது . இதனால் 225,000 கிலோகிராம் கார்பன் டை ஆக்சைடு வெளியேறுவது தவிர்க்கப்படுகிறது . அது 80 டன் எண்ணை அளவுக்குச் சமமானது . அந்த அளவு செலவு மிச்சமாகிறது. திருத்தந்தை உலகின் இயற்கைச் சூழலைக் காப்பதற்கு கொடுத்த வேண்டுகோளை செயல் திட்டத்தில் காட்டியுள்ளார் வத்திக்கான் திருப்பீடத்தைப் பாதுகாத்து வரும் மேதகு கர்தினால் ஜொவான்னி லஜோலோ. வத்திக்கான் திருப்பீடம் இயற்கையின் பசுமையைக் காப்பதில் முனைந்து நிற்கிறது .








All the contents on this site are copyrighted ©.