ஒரிசாவில் மதமோதல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய அமைச்சர் குழு ஒன்று சென்று பார்வையிட்டுத்
திரும்பியுள்ளது
நவ.19,2008. ஒரிசாவில் மதமோதல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய அமைச்சர் குழு ஒன்று
சென்று பார்வையிட்டுத் திரும்பியுள்ளது.
அமைச்சர்கள் சரத்பவார், மெய்ரா குமார்,
பி.கே. கியின்தியா அடங்கிய குழு நேற்று பாதிக்கப்பட்ட மக்கள் வாழும் முகாம்களைச் சந்தித்து
அங்கு பயத்தில் வாழும் கிறிஸ்தவர்களுடன் நேரிடையாக உரையாடினர்.
அகதிகளாக முகாம்களில்
வாழும் கிறிஸ்தவர்கள், அமைதி நடவடிக்கைகளுக்கென பல்வேறு விண்ணப்பங்களையும் மத்திய அமைச்சர்களிடம்
சமர்ப்பித்தன.