2008-11-18 20:32:12

தாய்லாந்தின் கத்தோலிக்கர்கள் அமைதியைக் கொண்டுவருவர். 18,நவம்பர், 08.


தாய்லாந்து நாட்டின் ஆயர்கள் மன்றத்தின் நீதி மற்றும் அமைதி மன்றத்தின் தலைவர் ஆயர் சயாரா குடிமக்கள் மற்றவர்கள் கருத்துக்களுக்கு மரியாதை கொடுக்கவும் , அரசியல் மோதல்களைத் தவிர்க்கவும் ஊக்கப்படுத்தினார் . தாய்லாந்து நாட்டில் -மனித உரிமைகள் தினம்- சென்ற ஞாயிறு அன்று கொண்டாடப்பட்டது .விருப்பு வெறுப்புகளை வென்று பிறர் கருத்துக்களுக்கு மதிப்புக் கொடுத்து தாய்லாந்து நாட்டு மக்களுக்கு சமாதானத்தைக் கொண்டுவருமாறு அறைகூவல் விடுத்தார் ஆயர் பிலிப் பாஞ்சாங் சயீரா . பிரிவினை உணர்வுகளைத் தவிர்த்திடுமாறு கேட்டுக்கொண்டார் . மாநகரச் சண்டையில் கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி இருவர் கொல்லப்பட்டனர் , 443 பேர் அங்கு காயமுற்றனர் . மற்றவர்கள் கருத்துக்களை மதிக்காததே இந்தப் பிரிவினைகளுக்குக் காரணம் என ஆயர் சயீரா தெளிவுபடுத்தினார் . கத்தோலிக்கச் திருச்சபை காயங்களை ஆற்றும் மருந்து எனவும் ,நாம் அனைவரின் ஒரே உடல் உறுப்புக்கள் எனவும் ஆயர் மேலும் கூறினார் .








All the contents on this site are copyrighted ©.