2008-11-18 14:20:17

ஆந்திர அரசு கிறிஸ்தவர்களுக்கு ஆதரவாக வகுத்துள்ள இரண்டு திட்டங்களுக்குத் தலத்திருச்சபை. வரவேற்பு


நவ.18,2008. இந்தியாவின் ஆந்திர மாநில அரசு கிறிஸ்தவர்களுக்கு ஆதரவாக வகுத்துள்ள இரண்டு திட்டங்களுக்குத் தனது வரவேற்பை அளித்துள்ளது தலத்திருச்சபை.

ஆந்திர அரசு, இம்மாதம் 13ம் தேதி, கிறிஸ்தவ சிறுபான்மை நிதி கழகம் மற்றும் அம் மாநிலத்தின் சிறுபான்மை நலத்துறையில் கிறிஸ்தவர்களுக்கென தனிப்பிரிவை உருவாக்கியுள்ளது.

கடன்களை இன்னும் திருப்பிச் செலுத்தவும் வாழ்க்கைக்குத் தேவையான வருவாயை ஈட்டவும் முடியாமல் இருப்பவர்களுக்கென வங்கிகளைவிட குறைந்த வட்டிக்குக் கடன் கொடுப்பதற்கு கிறிஸ்தவ சிறுபான்மை நிதி கழகம் உதவும். இக்கழகத்திற்கு 28 இலட்சம் ரூபாயையும் அரசு ஒதுக்கியுள்ளது. மேலும் அம்மாநிலத்தில் கிறிஸ்தவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு உதவுவதற்கு கிறிஸ்தவர்களுக்கான புதிய பிரிவு உதவும்.

கடந்த ஆண்டில் பல்வேறு கிறிஸ்தவ குழுக்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் அரசு இம்முயற்சியை எடுத்ததாக அரசின் அறிக்கை கூறுகிறது.

ஆந்திர அரசின் இந்நடவடிக்கை பற்றிப் பேசிய ஹைதராபாத் பேராயர் மரம்புடி ஜோசி, அரசின் இம்முயற்சியை வரவேற்றுள்ளதோடு, இக்கழகம் ஏழைக் கிறிஸ்தவர்கள் முன்னேறுவதற்கு உதவும் என்றார்.








All the contents on this site are copyrighted ©.