2008-11-17 19:46:59

ஒபாமாவின் ஆட்சி கிறிஸ்தவ வாழ்வுக்குச் சோதனை காலம் என்கிறார் வத்திக்கான் அதிகாரி. 17, நவம்பர், 08.


கர்தினால் ஜேம்ஸ் பிரான்சிஸ் ஸ்டாப்பர்டு முந்நாள் வத்திக்கான் திருப்பீட பொது நிலை மக்களுக்கான மன்றத்தின் தலைவர் அமெரிக்காவின் கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தில், முந்நாள் திருத்தந்தை 2 ஆம் ஜான் பால் பெயரில் இயங்கும் நிறுவனத்தில் திருமணமும் குடும்ப வாழ்வும் என்பது பற்றிய தலைப்பில் கருத்தரங்கு நடத்தியது .அங்கு திருத்தந்தை 6 ஆம் பவுலின் மனித வாழ்வு என்ற சுற்றுமடல் பற்றிப் பேசினார் கர்தினால் ஜேம்ஸ் ஸ்டாப்பர்டு . மனித வாழ்வு பற்றிய சுற்றுமடல் பல அமெரிக்கர்களை நிலைகுலையச் செய்தது. அதே போல வாழ்வுக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பாரக் ஒபாமா அமெரிக்க அதிபராக ஆட்சிபுரியும் காலத்தில் கிறிஸ்தவர்களுக்கு ஜெத்சமனித் தோட்டம் காத்திருக்கிறது என்றார் கர்தினால் . புதிய அதிபரின் ஆட்சி கிறிஸ்தவ வாழ்வோடு மோதல் போக்கிலும் , அதை அழிக்கும் விதத்திலும் இருக்கும் என்றார் . 1996 இல் ஜேம்ஸ் ஸ்டாப்பர்டு திருப்பீட பொது நிலை மக்கள் மன்றத்தின் தலைவரானார் . 1998 இல் கர்தினாலக உயர்த்தப்பட்டார் .








All the contents on this site are copyrighted ©.