2008-11-16 19:58:25

ஐரோப்பிய ஆயர்கள் குழுவும் உலக வெப்ப நிலை மாற்றமும். 16,நவம்பர் ,08 .


ஐரோப்பிய ஆயர்கள் குழுவின் கருத்தரங்கு சென்ற 12 -14 தேதிகளில் நடந்தது . அவர்கள் ஆய்வில் முக்கிய ,அவசரத் தேவையாக உலக வெப்ப நிலை மாற்றம் பற்றிய கருத்து அலசப்பட்டது . மேலும் ஞாயிறு தினத்தை எல்லோருக்கும் ஓய்வு நாளாக விடுமுறை தருவது பற்றியும் , லிஸ்பன் உடன்படிக்கை பற்றியும் , பண நெருக்கடி பற்றியும் , புலம் பெயர்ந்து வரும் கிறிஸ்தவர்கள் பற்றியும் , சென்ற ஆகஸ்ட் மாதம் நடந்த ஒசெட்டாப் போருக்குப் பிறகு இரஷ்யாவோடு ஐரோப்பா கொள்ள வேண்டிய அணுகுமுறை பற்றியும் விவாதிக்கப்பட்டது . 38 பக்கங்களில் வெப்ப நிலை மாற்றம் பற்றி கருத்துப் பரிமாறப்பட்டது . இது மனித குலத்துக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பதாக ஆயர்கள் கூறியுள்ளனர் . ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களை நன்னெறிக் கோட்பாடுகளுடன் வெப்பநிலை மாற்றம் பற்றிய பிரச்சனையை அணுகுமாறும் , நீதி வழுவாமல் தெற்கிலிருக்கும் நாடுகளோடு ஒருங்கிணைந்து இதற்குத் திட்டமிட வேண்டும் எனக் கூறியுள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.