கத்தோலிக்க விசுவாசிகள் வீரத்துவமான சாட்சிய வாழ்வு வாழ அழைப்பு - கர்தினால் ரைல்கோ
நவ.15,2008. பொதுநிலை கத்தோலிக்க விசுவாசிகள் தங்களது தாழ்வு மனப்பான்மையை விட்டுவிட்டு
உலகில் வீரத்துவமான சாட்சிய வாழ்வு வாழ முன்வருமாறு திருப்பீட பொதுநிலையினர் அவைத் தலைவர்
கர்தினால் ஸ்தனிஸ்லாவ் ரைல்கோ அழைப்புவிடுத்தார்.
இத்திருப்பீட அவை நடத்திய 23ம்
ஆண்டுக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் இவ்வாறு உரைத்த கர்தினால் ரைல்கோ, மேற்கத்திய
சமூகங்களின் நிலைகளையும் அலசினார்.
மேற்கத்திய சமூகங்கள், ஒருவித பொருளாயுத சர்வாதிகாரப்
போக்கைக் கொண்டுள்ளன என்ற அவர், வளர்ந்து வரும் கிறிஸ்தவத்திற்கெதிரான புதிய போக்கையும்
கண்டித்தார்.
நற்செய்திக்கு ஏற்ப வாழவும் செயல்படவும் விரும்புகிறவர்கள், இந்த
சுதந்திரமான மேற்கத்திய சமூகங்களிலும் கூடக் கஷ்டப்பட வேண்டியிருக்கிறது என்றும் குறை
கூறினார்.