2008-11-14 20:35:38

வழிபாட்டு ஆண்டின் 33 ஆம் ஞாயிறு விழாவைக் கொண்டாடுகிறோம் . 16 நவம்பர் , 08 .


இன்றைய நற்செய்தி – திருத்தூதர் மத்தேயு . 25,14-30.



தாலந்து உவமை .



ஒரு மகாக் கஞ்சன் தன்னிடமிருந்த தங்கத்தையெல்லாம் உருக்கி , ஒரே கட்டியாக்கி , தன் நிலத்தில் புதைத்து வைத்தான் . ஒவ்வொரு நாளும் அவன் நிலத்தைத் தோண்டித்தோண்டி தங்கத்தை எடுத்துப் பார்த்து பூரிப்படைவான் . இதை ஒருவன் பார்த்துவிட்டான் . இரவில் வந்து அதைத் திருடிக்கொண்டு சென்றுவிட்டான். கஞ்சன் மிகவும் கவலைப்பட்டான் . அவனுக்கு யாராலும் ஆறுதல் சொல்ல முடியவில்லை . ஒரு நாள் நண்பன் ஒருவன் அவனிடம் இந்த இழப்பை இவ்வளவு பெரிதாக எடுத்துக் கொள்ளாதே . நீ தங்கம் வைத்திருந்த இடத்தில் ஒரு பெரிய செங்கற் கல்லை வை . அதை ஒவ்வொரு நாளும் சென்று பார் . முன்னைய நிலையைவிட நீ இப்போது மோசமான நிலையில் இல்லை . உன்னிடம் தங்கம் இருந்தபோதும் நீ அதைப் பயன்படுத்தவில்லை .



நாம் எல்லோருமே நம்மிடம் உள்ள சில திறமைகளைப் பயன்படுத்தாமல் விட்டுவிடுகிறோம் . ஒரு தாலந்து கொடுக்கப்பட்டவன் மட்டும் திறமையைப் புதைத்து வைப்பதில்லை , 5 தாலந்தும் , 10 தாலந்தும் கொடுக்கப்பட்டவர்களும் புதைத்து வைத்துவிடுகிறார்கள் . பல மடங்காகப் பெருக்குவதற்குப் பதிலாக , அவர்கள் தவறான முறையில் அச்சத்துக்கு இடம் கொடுத்தோ , சோம்பலுக்கு இடம் கொடுத்தோ ,தமது திறமைகளைப் புதைத்துவிடுகிறார்கள் . அவ்வாறு புதைக்கப்பட்ட திறன்களால் யாருக்கு என்ன பயன் ? .



அனைவரும் இணைந்து செபிப்போம் – எங்கள் வானகத் தந்தையே , உமது அருளால் நாங்கள் நிறையத் திறமைகளைக் கொண்டிருக்கிறோம் . நாங்கள் எங்கள் திறமைகளைப் புதைத்துவிடாமல் இருக்க அருள் தாரும் . நீவிர் எதிர்பார்ப்பதுபடி நாங்கள் வளர்ச்சியடையவும் , ஒரு நாள் உமது மகிழ்ச்சியான வரவேற்பில் , “ நன்று , நம்பிக்கைக்குரிய பணி்யாளரே ” , என்னும் இனிய வார்த்தைகளைக் கேட்கும் வரம் தாரும் . இதை எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக மன்றாடுகிறோம் .








All the contents on this site are copyrighted ©.