2008-11-14 17:51:01

பிரேசில் நாட்டின் குடியரசுத் தலைவர் திருத்தந்தையைச் சந்தித்தார். 14 நவ. 08.


இம்மாதம் 13 ஆம் தேதி, வியாழன் அன்று, பிரேசில் நாட்டுத் தலைவர் லூயி இன்னாசியோ லூலா திருத்தந்தையோடு வத்திக்கானில் கலந்து பேசினார் . அந்நாட்டில் வாழ்வின் தரத்தை மேம்படுத்துவது பற்றியும் , சமூதாயச் சீரழிவலும் , வன்முறைகளாலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவு கொடுப்பது பற்றியும் பேசியதாகக் கூறப்பட்டது . பிரேசில் நாட்டில் திருச்சபையின் நிலைமை குறித்து இரு நாடுகளுக்குமிடையே புதிய ஒப்பந்தம் ஒன்று முழுமைபெற்றுள்ளதாக வத்திக்கான் கூறியுள்ளது . திருமணங்கள் பற்றியும் , கல்விக்கூடங்களில் மறைக்கல்வி கற்றுக்கொடுத்தல் பற்றியும் அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது எனத் தெரிவித்தது வத்திக்கான் திருப்பீடச் செய்தி .








All the contents on this site are copyrighted ©.