2008-11-14 17:53:10

குழந்தைகளின் பராமரிப்புப் பற்றிய வத்திக்கானின் கருத்தரங்கு .14 நவம்பர் ,08


இம்மாதம் 13 தேதியிலிருந்து 15 தேதிவரை அகில உலக 23 ஆவது குழந்தைகள் பராமரிப்புக்கான கருத்தரங்கு வத்திக்கானில் நடைபெறுகிறது . இது பற்றிக்கூறிய வத்திக்கான் திருப்பீடத்தின் நலம் காக்கும் அமைப்பின் தலைவர் கர்தினால் ஜாவியர் லொசானோ பாராகன் , பல குழந்தைகளும் , இளையோரும் கவனிக்கப்படாது விடப்பட்டுள்ளனர் . கல்வியறிவு கொடுக்கப்படுவதில்லை . பக்குவமாக வளர்க்கப்படுவதில்லை . இவர்களுக்கு உதவுவது எப்படி என்று இக்கருத்தரங்கில் ஆராயப்படும் என அவர் கூறினார் . கடந்த 10 ஆண்டுகளில் 20 இலட்சம் குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளார்கள் . 60 இலட்சம் குழந்தைகள் ஊனமாகியுள்ளார்கள் . பலர் போருக்குச் செல்வதற்கும் , சிறுவயதிலேயே வேலைக்குச் செல்லவும் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாகக் கர்தினால் வருத்தம் தெரிவித்துள்ளார் .








All the contents on this site are copyrighted ©.