2008-11-14 17:57:38

ஐ.நா சபை அமைதியைக் கற்றுத்தரும் கல்விக்கூடமாக இருக்க வேண்டும் என்று கூறுகிறார் வத்திக்கான் அதிகாரி . 14 , நவம்பர் ,08 .


பலவீனங்களும் , எதிர்மறைகளும் இருந்தாலும், மதங்கள் ஒப்புரவுக்கும் அமைதிக்குமான நற்செய்தியை வழங்குகின்றன என திருப்பீடத்தின் பல் சமயக் கலந்துரையாடலுக்கான மன்றத்தலைவர் கர்தினால் ஜான் லூயி டவுரான் இம்மாதம் 12 ஆம் தேதி ஐ.நா சபையில் கூறினார். சமயத்தலைவர்கள் சகிப்புத்தன்மைக்கும் , ஏதோ ஒருவிதமான பணிகளுக்கும் அப்பால் அமைதியை நிலை நாட்ட தங்களை அர்ப்பணம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார் . வாழ்வின் புனிதத்தையும் , மனித மாண்பையும் காக்கவேண்டும் என்ற அவர் , மனச்சாட்சியின் சுதந்திரத்தையும் , மதச் சுதந்திரத்தையும் ,பொறுப்புள்ள முறையில் சுதந்திரத்தைப் பயன்படுத்துவதையும் , மற்றோர் கருத்துக்களை மதிப்பதையும் , சரியானமுறையில் சிந்திப்பதையும் ,குடியாட்சியைப் போற்றுவதையும், இயற்கை வளத்தைக் காப்பதையும் அனைவரும் இணைந்து செயல்படுத்த வேண்டும் என்றும் ஐ.நா சபையில் கூறினார் .








All the contents on this site are copyrighted ©.