2008-11-13 18:31:40

பொருளாதாரச் சிக்கல்பற்றி அமெரிக்க ஆயர் குழுவின் அறிக்கை . 13 நவ. 08.


அமெரிக்க ஆயர்கள் குழுவின் இலையுதிர் காலத்துக்கான கருத்தரங்கு பால்ட்டிமோரில் நடந்துகொண்டிருக்கிறது. அமெரிக்கா உலகெங்கும் உள்ள மக்களை ,சகோதர , சகோதரிகளாகப் பாவித்து அவர்களைப் பாதுகாத்து வளப்படுத்த வேண்டும் எனக் கூறியுள்ளனர் . கஷ்டமான காலங்கள் நம்மை இணைக்கவோ , பிரிக்கவோ செய்யலாம் எனக் கூறியுள்ளார் சிக்காகோவின் கர்தினால் ஜார்ஜ் . மக்களின் ஆயர்கள் என்ற முறையில் பொருளாதாரச் சிக்கலின் நன்மையும் தீமையும் நாம் அறிவோம் . இதனால் உலகின் பல பகுதிகளில் பலர் வேலையை இழக்கவும் , வீடுகளை இழக்கவும் , உடல் நலத்துக்குப் பாதிப்பு ஏற்படவும் , பாதுகாப்பையும் நம்பிக்கையையும் இழக்கவும் வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது . ஆனால் கத்தோலிக்கத் திருச்சபை தேவையுள்ள இடங்களில் உதவிசெய்யவும் , துன்பத்தில் உள்ளோரின் துயர் துடைக்கவும் , பொருளாதார வளர்ச்சிக்கும் நீதிக்கும் பாடுபடவும் வேண்டும் என்று கூறியுள்ளார் ஆயர்கள் குழுவின் தலைவர் சிக்காகோவின் கர்தினால் பிரான்சிஸ் ஜார்ஜ் .








All the contents on this site are copyrighted ©.