2008-11-12 15:45:08

பாகிஸ்தானில் கத்தோலிக்க மகளிர் பள்ளியொன்று குண்டு வைத்து தாக்கப்பட்டுள்ளது


நவம்.12,2008 பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப் பகுதியிலுள்ள சங்கோட்டாவின் கத்தோலிக்க மகளிர் பள்ளியொன்று குண்டு வைத்து தாக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் அப்போஸ்தலிக்க கார்மேல் சபை கன்னியர்களால் நடத்தப்படும் தங்கும் விடுதியுடன்கூடிய இப்பள்ளி இசுலாமிய மற்றும் கிறிஸ்தவ ஏழை மாணவிகளுக்காக நடத்தப்பட்டு வந்தது. அச்சத்தின் காரணமாக இப்பள்ளி அருட்கன்னியர்களால் ஏற்கனவே மூடப்பட்டு இருந்ததால் வெடிகுண்டு தாக்குதலின் போது எவ்வித உயிரிழப்பும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் தலத்திருச்சபையின் கூற்றுப்படி இவ்வடமேற்கு எல்லை மாகாணத்தில் அண்மை ஆண்டுகளில் ஏறத்தாழ 150 பள்ளிகள் வரைத் தாக்கப்பட்டுள்ளன.

இசுலாமியரல்லாதவர்களை இசுலாம் மதத்திற்கு மாறக் கட்டாயப்படுத்தும் பாகிஸ்தானின் தாலிபான் குழுவினர் மதம் மாற மறுப்பவர்களை அங்கிருந்து விரட்ட வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தி வருகிறது.








All the contents on this site are copyrighted ©.