2008-11-10 12:48:49

பொலிவியத் தலத்திருச்சபைக்கு இருக்கும் கடமைகளை திருத்தந்தை வலியுறுத்தல்


நவம்.10,2008 நம்பிக்கைகளைத் தொடரவும் விசுவாசத்தை உயிர்துடிப்புடையதாக வைத்திருக்கவும் ஐக்கியத்தையும் ஒப்புரவையும் முன்னேற்றவும் அமைதியைக் காக்கவும் பொலிவியத் தலத்திருச்சபைக்கு இருக்கும் கடமைகளை வலியுறுத்தினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

ஐந்து ஆண்டிற்கு ஒருமுறை இடம் பெறும் அட் லிமினா சந்திப்பையொட்டி உரோம் வந்திருந்த பொலிவிய ஆயர்களை இன்று காலைத் திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை, வெர்று வாக்குறுதிகளாலும் தவறான பாதைகளாலும் மக்கள் வழிநடத்தப்படும் போது அவர்களுக்குச் சரியான வழிகளைக் காட்டி அவர்களை விசுவாசத்தில் உறுதிப்படுத்த வேண்டியது தலத்திருச்சபைத் தலைவர்களின் கடமையாகிறது என்றார்.

மதிப்பீடுகள் என்பவை மனிதனின் ஆழ்மனதில் ஊடுருவிச் செல்வதுடன் இறைவார்த்தையால் ஒளிர்விக்கப்பட்டு விசுவாசத்தின் உறுதிப்பாடுகளாக மாற்றம் பெற்று திருவருட்சாதனங்களாலும் ஒழுக்கரீதி மதிப்பீடுகளுக்கு விசுவாசமாக இருப்பதாலும் பலம்பெற வேண்டுமென அழைப்பு விடுத்தார் திருத்தந்தை.

தற்போது திருச்சபையில் கொண்டாடப்படும் புனித பவுல் ஆண்டு பர்றியும் குறிப்பிட்ட அவர், பொலிவிய கத்தோலிக்கப் பள்ளிகள் தங்கள் தனித்தன்மையை இழக்காமல் செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.








All the contents on this site are copyrighted ©.