2008-11-09 20:13:12

ஞாயிறு முழு விடுமுறை தினம் - ஐரோப்பியக் ஆயர்கள் குழு .09,நவம்பர்,08.


ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பு , பணி நாட்கள் பற்றி திட்டமிட்டு வருகிறது . அதில் ஞாயிறு தினத்தை முழு விடுமுறையாக்குவது பற்றிய திட்டம் எதுவும் இல்லை என ஐரோப்பிய ஆயர்களின் கூட்டமைப்புக் கூறுகிறது . குறைந்த பட்சம் ஞாயிறாவது விடுமுறை நாளாக இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். பணியாளர்களின் உடல் நலத்தைக் கருத்தில் கொண்டும் , சமூகத் தேவைகளான குடும்பப் பணிகள் , உறவுகளை வலுப்படுத்தல் , மற்றும் ஆன்மீகத் தேவைகளை நிறைவேற்றுதல் ஆகியனவற்றுக்காக ஞாயிறு தினம் முழு விடுமுறையாக வேண்டும் எனக் கூறியுள்ளனர். பாராளு மன்றத்தின் ஏழு உறுப்பினர்களை இதை அமலாக்க முயன்று வருகின்றனர் எனத் தெரிகிறது .








All the contents on this site are copyrighted ©.