2008-11-09 20:29:53

கிழக்கு எருசலேத்தில் அதிக வீடுகள் இடிக்கப்படுகின்றன – 09-11-08 .


எருசலேத்தின் கிழக்கில் இஸ்ராயேல் அதிகாரிகள் வீடுகளை அதிக அளவில் இடித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது . கடந்த வாரம் அமெரிக்க அதிபர் பற்றிய தகவல்களில் உலகம் மூழ்கியிருந்தபோது பாலஸ்தீன மக்களின் குடியிருப்புக்களை அகற்ற வீடுகளைத் தகர்த்து வேறு இடங்களில் வீடுகளைக் கட்டிக்கொள்ளுமாறு அவர்களை இஸ்ரயேல் துருப்புக்கள் வற்புறுத்தியுள்ளனர் என பாலஸ்தீனியர்கள் சார்பாக உறவுப்பேச்சுக்களை இஸ்ராயேலரோடு நடத்தும் முக்கிய உறுப்பினர் டாக்டர் சாயிப் எரேக்காட் கூறியுள்ளார் . பெய்ட் ஹனானா என்ற இடத்தில் நான்கு பாலஸ்தீன கட்டடங்களை தற்போது இஸ்ராயேலர்கள் தகர்த்துள்ளதாகவும் , 20 பேருக்கும் அதிகமானவர்கள் வீடுகளை இழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார் . இது வரை மொத்தம் 94 வீடுகளை நவம்பர் 2007 ஒப்பந்தப் பேச்சுக்குப்பின் இஸ்ராயேல் உறுதிமொழியை மீறி அழித்துள்ளது . ஐ.நா சபையின் பல முடிவுகள் இதனைக் கண்டித்துள்ளன .








All the contents on this site are copyrighted ©.