2008-11-09 19:24:27

இஸ்லாமியச் செய்தித் தாளில் கத்தோலிக்க இஸ்லாமியக் கருத்தரங்கு பற்றிய செய்தி . 09 நவம்பர் .08 .


அரேபிய மொழியில் சவுதியின் அஷார்க் அல்-அவ்சட் என்ற பத்திரிக்கையில் வத்திக்கானில் இம்மாதம் 4-6 தேதிகளில் நடந்த கருத்தரங்கு பற்றி முதல் பக்கத்தில் செய்தி வெளியாகியுள்ளது . இரு சமயத்தவரும் இணைந்து வெளியிட்ட செய்தியில் ஏழைகளையும் , கடன் தொல்லையால் அவதியுறும் நாடுகளையும் கவனத்தில் கொண்டு உதவுமாறு அழைப்பு விடுத்துள்ளது கத்தோலிக்க இஸ்லாமியக் கருத்தரங்கு எனத் தெரிவிக்கிறது . இந்தக் கருத்தரங்கு நல்ல முறையில் நடந்ததாதக் கூறப்பட்டுள்ளது . சமயங்களின் பெயரால் நிகழும் வன்முறைகளையும் அநீதிகளையும் களையுமாறு கூறும் கருத்தரங்கின் இறுதி அறிக்கை, கடவுள்-அன்பையும், பிறரன்பையும் பல பரிமாணங்களில் காட்டுமாறு விழைகிறது . அமெரிக்காவின் இஸ்லாமிய உறுப்பினர் செய்யத் ஹூசேன் பேசும்போது, மதச் சுதந்திரத்தை நம்பும் அவர் எவரும் கட்டாயமாக மதம் மாற்றுவதை விரும்பவில்லை என்பதைத் தெரிவித்தார் .போஸ்னியா நாட்டின் இஸ்லாமியத் தலைவர் முஸ்தபா செரிக் பேசும்போது போஸ்னியாவில் சென்ற நூற்றாண்டில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டதை வருத்தத்தோடு நினைவு கூர்ந்தார் . திருத்தந்தை தனிமனிதனின் சுதந்திரத்தையும் , மதச் சுதந்திரத்தையும் வலியுறுத்தினார் . இரு சமயத்தவரும் இக்கருத்தரங்கின் வழியாக ஒருவர் மற்றவருக்குள்ள பாசத்தை வெளிப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்த திருத்தந்தை , இது ஒருவர் மற்றவரை மேலும் நன்கு புரிந்து கொள்ள வழிவகுக்கும் எனவும் தெரிவித்துள்ளார் , என சவுதியின் இஸ்லாமிய அஷார்க் அல்-அவ்சட் செய்தித் தாள் தெரிவிக்கிறது.








All the contents on this site are copyrighted ©.