2008-11-08 20:11:47

வத்திக்கானுக்கான தாய்வான் நாட்டின் புதிய தூதர் .08 , நவம்பர் ,08.


இவ்வாரம் சனிக்கிழமை திருத்தந்தை தைவான் நாட்டின் புதிய தூதர் வாங் லாரி யுயுவானை வரவேற்றுப் பேசினார் . வாங் லாரி தூதரக அதிகாரி என்பதற்கான சான்றிதழ்களை திருத்தந்தையிடம் வழங்கினார் . அதுபோது திருத்தந்தை சீனாவுக்கும் தைவானுக்குமிடையே உருவாகியிருக்கும் நல்ல உறவுகளைப் பாராட்டினார் . மனந்திறந்து பேசி கலந்துரையாடி உலகின் திடத்தன்மையைக் குலைக்கும் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வுக்கு வரவேண்டும் எனத் திருத்தந்தை கூறினார் . இந்தச் சமயத்தில் சீனாவும் தைவானும் உறவுகளில் நல்ல முன்னேற்றம் கண்டிருப்பதை திருத்தந்தை வரவேற்றுள்ளார் . எங்கெல்லாம் ஒப்புரவுக்கும் கலந்துரையாடலுக்கும் சிறு அடையாளமாவது காணப்படுகிறதோ அங்கெல்லாம் கத்தோலிக்கத் திருச்சபை அமைதியான தீர்வுக்கு வர முயல ஆர்வமாக இருப்பதாகத் திருத்தந்தை கூறினார் . புதுப்பித்தலுக்குத் தயாராக இருக்கும் ஆசிய மக்களிடையே வளமான , பல் சமயக் கலந்துரையாடலுக்கு இடமிருப்பதாகத் திருத்தந்தை மேலும் கூறினார் . தாய்வான் மதச்சுதந்திரத்தை ஆதரிப்பதால் திருச்சபை அங்கு நற்செய்தியை அறிவிக்கவும் , அன்பைப் பரிமாறி பிறரன்புச் சேவையில் ஈடுபடவும் இயல்வதாகத் திருத்தந்தை கூறினார் . தைவானில் உள்ள கத்தோலிக்கத் திருச்சபையின் சார்பாக தைவான் அரசுக்குத் திருத்தந்தை நன்றி கூறினார் .








All the contents on this site are copyrighted ©.