2008-11-07 17:30:10

மனித வாழ்வைப் பாதுகாப்போம் என்கின்றனர் கிறித்தவ இஸ்லாமியக் கலந்து உரையாடல் குழுவினர் . 07, நவம்பர் , 08 .


இம்மாதம் 4 தேதியிலிருந்து 6 வரை வத்திக்கானில் கிறிஸ்தவ , இஸ்லாமிய சமயங்களைச் சேர்ந்த 58 பேர் சமய நல்லிணக்கக் கலந்து உரையாடலில் பங்கேற்றனர் . வத்திக்கான் திருப்பீடம் இவர்களைத் தேர்ந்து வழி நடத்தியது .

இவர்கள் இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளனர் . அதில் மனித வாழ்வையும் , மனித உரிமைகளையும் காப்பதற்கு உறுதிபூண்டுள்ளனர் . பல இஸ்லாமிய நாடுகளில் கிறிஸ்தவர்களுக்கு மறுக்கப்படும் சமய உரிமைகளைத் தரவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர் .



மனித வாழ்வென்பது கடவுள் நமக்கு வழங்கும் மகத்தான கொடை . அதைப் பாதுகாத்து எல்லா நிலைகளிலும் போற்ற வேண்டும் . அன்பு செய்யும் கடவுளால் படைக்கப்பட்ட மனிதன் , கடவுளால் பகுத்தறிவும் , சுதந்திரமும் வழங்கப்பட்டுள்ளான் . கடவுளையும் பிறரையும் அன்பு செய்ய மனிதன் கடமைப்பட்டுள்ளான் . எனவே மனிதனை மாண்போடு நடத்தவேண்டும் . உண்மையான அன்பு என்பது ஒருவர் அவர் மனச்சான்றுப்படியும் , சமய வாழ்வில் சுதந்திரத்தோடும் செயல்படக் கொண்டுள்ள உரிமையைக் காப்பதாகும் . இது ஒருவர் தமக்கு விருப்பமான மதத்தைத் தனியாகவும் , பொதுவிலும் பின்பற்ற , கொண்டுள்ள உரிமையாகும் எனத் தெரிவித்துள்ளனர் . இவ்வாரம் நடந்த கலந்துரையாடல் அடுத்த இரண்டு ஆண்டுகளில் இஸ்லாமிய மத்தவரால் நடத்தப்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது .








All the contents on this site are copyrighted ©.