2008-11-06 20:12:18

கர்தினால் பெர்த்தோனே திருத்தந்தை 12 ஆம் பயஸூடைய விமர்சகர்களுக்குச் சவால் .06 நவம்பர் , 08 .


கர்தினால் தார்சீசியோ பெர்த்தோனே இத்திங்கள் 5 ஆம் தேதி முந்நாள் திருத்தந்தை 12 ஆம் பயஸ் பற்றிய கண்காட்சியை வத்திக்கானில் திறந்துவைத்தார் . அதுபோது பேசிய அவர் முந்நாள் திருத்தந்தை 12 ஆம் பயஸ் ஹிட்லரின் நாசிக் கட்சிக்கு ஆதரவாக இருந்தார் எனக் கூறுவதைக் கண்டித்தார். நாசிக்கட்சியினரின் கொடுமைகளைக் கண்டும் காணாதவாறு இருந்ததாகக் கூறுவதையும் , அத்திருத்தந்தையை ஹிட்லரின் பாப்பிறை எனக் கூறுவதும் வரலாற்றுப்படி உண்மையல்ல என்றும் , மட்டுமீறிய பேச்சு என்றும் வத்திக்கானின் செயலர் மேதகு கர்தினால் தார்சீசியோ பெர்த்தோனே கூறினார் .








All the contents on this site are copyrighted ©.