2008-11-05 10:34:17

திருத்தந்தையின் புதன் மறைபோதகம் . 05 நவம்பர் , 08 .


இன்றைய புதன் மறைபோதகம் தூய பேதுரு பசிலிக்கா வளாகத்தில் இருந்தது . வந்தவர்களை வாழ்த்தி வரவேற்றார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் .



திருத்தூதர் பவுலின் போதகத்தை இன்றும் தொடர்ந்தார் திருத்தந்தை . இயேசுக்கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் பற்றித் திருத்தூதர் பவுல் கூறியது பற்றி மறைபோதகம் வழங்கினார் . இயேசுவின் தொடக்க காலத் திருத்தூதர்களிடமிருந்து தான் பெற்றுக்கொண்ட கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் பற்றிப் போதிக்க பவுல் ஆர்வமாக இருந்தார் . கிறிஸ்து உயிர்த்தெழுந்தது பற்றி மட்டுமல்ல , அதன் முக்கியத்துவத்தையும் பவுல் போதித்தார் . நமக்காக இறந்து , உயிர்த்த கிறிஸ்துவால் நாமும் மீட்கப்பட்டுள்ளோம் . கடவுள் திருமுன் செல்ல நாம் அருகதை பெற்றுள்ளோம் .கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் அவர் கடவுளின் திருமகன் என உறுதிசெய்கிறது . அவரை வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் ஆண்டவராக எண்பிக்கிறது . நாமும் அவருடைய இறப்பிலும் , உயிர்ப்பிலும் பங்காளிகளாக அழைக்கப்பட்டிருக்கிறோம் . நம்முடைய தற்காலத்தைய துன்பங்கள் கிறிஸ்துவின் துன்பத்திலும் , சாவிலும் நாம் பங்கேற்பதாகும் . நம்முடைய உயிர்த்தெழுதலின் நம்பிக்கை இறை அரசின் அனைத்துப் புனிதர்களோடும், இப்பொழுதே முழுமையான வாழ்வுக்கு நம்மை ஈர்க்கிறது . இயேசுவை ஆண்டவரென்று நம் நாவால் அறிக்கையிடுவதாலும் , அவரைக் கடவுள் உயிர்த்தெழச் செய்தார் என நம் உள்ளத்தில் நம்புவதாலும் நாம் மீட்பைப் பெற முடியும் என்கிறார் திருத்தூதர் தூய பவுல் . திருத்தூதரோடு நாமும் இணைந்து விசுவாசத்தோடும் ,நம்பிக்கையோடும் எப்பொழுதும் முழுமையான ஆர்வத்தோடும் இயேசுவையும் , அவருடைய உயிர்த்தெழுதலையும் உணர முயல்வோமாக என இன்று மறைபோதகம் வழங்கி , வந்திருந்த அனைவருக்கும் தமது அப்போஸ்தலிக்க ஆசியை வழங்கினார் நம் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் .








All the contents on this site are copyrighted ©.