2008-11-04 10:23:31

திருத்தந்தையின் ஆப்ரிக்கப் பயணம் நம்பிக்கையைக் கொணரும்


ஏழ்மை மற்றும் வன்முறைகளின் பாதிப்புகளால் துன்புறும் ஆப்ரிக்க மக்களுக்கு நம்பிக்கைகளை எடுத்துச் செல்வதாய் திருத்தந்தையின் திருப்பயணம் இருக்கும் என்றார் திருப்பீடப் பேச்சாளர் அருட்தந்தை ஃபெதிரிக்கோ லொம்பார்தி.

வரும் ஆண்டு மார்ச் மாதம் ஆப்ரிக்காவின் அங்கோலா மற்றும் கேம்ரூனில் திருப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக உலக ஆயர் பேரவைக் கூட்டத்திற்குப் பின் திருத்தந்தை 16ம் பெனெடிக்ட் அறிவித்ததைப் பற்றிக் குறிப்பிட்ட திருப்பீடப்பேச்சாளர், 2009ம் ஆண்டின் ஆப்ரிக்காவுக்கான ஆயர் மாமன்றத்தின் சிறப்பு அவைக் கூட்டத்திற்கு இத்திருப்பயணம் ஒரு தயாரிப்பாக இருக்கும் என்றார்.

ஆப்ரிக்கா என்றவுடன் ஏழ்மையும் மோதல்களும் நம் கண் முன் வருகின்ற போதிலும் அதன் சிறப்புத் தகுதியான உயிர்த்துடிப்பான வாழ்வை நாம் மறந்துவிடக்கூடாது என்ற யேசுசபைக் குரு லொம்பார்தி, ஆப்ரிக்க மக்களே மாண்புடனும் நம்பிக்கையுடனும் அக்கண்டத்தைக் கட்டியெழுப்பும் வண்ணம் அவ்வுயிர்த்துடிப்பிற்கு ஊக்கம், ஒருமுகத்தன்மை மற்றும் விடுதலை வழி உருவம் கொடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.








All the contents on this site are copyrighted ©.