2008-11-04 15:50:26

கத்தோலிக்க, இஸ்லாமிய அறிஞர்களின் மன்றம்,04 நவ. 08


கத்தோலிக்கத் திருச்சபை மற்றும் இஸ்லாமிய அறிஞர்களின் மன்றம் மூன்று நாள் சமயக் கலந்துரையாடலுக்கு இம்மாதம் 4 ஆம் வத்திக்கானில் கூடுகிறது .



இக்கருத்தரங்கு நவம்பர் 6 வரை நடக்கவுள்ளது . இதனை திருப்பீடத்தின் சமயக் கலந்துரையாடலுக்கான மன்றம் நடத்துகிறது . கருத்தரங்கின் மையக்கருத்து கடவுளுக்கு அன்பு மற்றும் பிறரன்பு என்பதாகும் . முதல் நாளில் இறையியல் மற்றும் ஆன்மீக அடித்தளம் என்ற தலைப்பில் கலந்துரையாடல் நடக்கும் . இரண்டாவது நாள் மனித மாண்பு பற்றியும் , ஒருவர் மற்றவரிடம் பண்புடன் நடந்து கொள்வது பற்றியும் இருக்கும் .



இந்த தலைப்புக்களில் இஸ்லாமியர் ஒருவரும் கத்தோலிக்கர் ஒருவரும் உரை வழங்க உள்ளனர் . அதன் அடிப்படையில் பொது விவாதமும் கருத்துப் பரிமாற்றமும் நடைபெற உள்ளது . மூன்றாவது நாள் கருத்தரங்கில் திருத்தந்தை கலந்து கொள்வார் . வியாழன் மாலை 04.30 மணிக்கு உரோமையில் உள்ள கிரகோரியன் பல்கலைக்கழகத்தில் பொது அமர்வு ஒன்றில் இரு சமயத்தவரும் இணைந்து ஒப்பந்தம் ஒன்றை வெளியிடுவர். மேலும் இம் மன்றத்தில் ஆய்வு செய்யப்பட்டவை பற்றிய கேள்விகளுக்கு ஒரு கத்தோலிக்க அறிஞரும் , ஒரு இஸ்லாத்தைச் சேர்ந்த அறிஞரும் பதில் தருவர் . ஒவ்வொரு சமயத்தின் தரப்பிலும் 29 பேர் கலந்து கொள்வர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது .








All the contents on this site are copyrighted ©.