2008-11-03 18:53:46

திருத்தந்தையின் ஞாயிறு மூவேளை செபம் . 03 நவ. 08 .


விசுவாசத்தின் அடையாளங்களாக வாழ்ந்து அமைதியில் இளைப்பாறும் அனைத்து ஆன்மாக்களையும் நோக்கி நம் பார்வையைத் திருப்புவோம் என இஞ்ஞாயிறன்று மூவேளை செப உரையில் அழைப்பு விடுத்தார் திருத்தந்தை. அனைத்து ஆன்மாக்களின் நினைவு நாளான இஞ்ஞாயிறன்று புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை புனித பவுலின் வார்த்தைகளான இறந்து உயிர்த்த இயேசுவின் வழியாக இறைவன் இறந்த அனைவரையும் தன்னுடன் இணைத்துக் கொள்வார் என்பதை எடுத்துரைத்தார். இன்றைய உலகில் மரணம் மற்றும் முடிவற்ற வாழ்வின் உண்மைநிலைகளை மக்களுக்குப் போதிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்பதையும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை .கிறிஸ்தவ விசுவாசம் என்பது இன்றைய மக்களுக்கு வாழ்வை மாற்றியமைக்கும் மற்றும் புத்துயிர் வழங்கும் ஒரு நம்பிக்கை என தன் சுற்றுமடலில் ஏற்கனவே எழுதியுள்ளதைச் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை . இவ்வுலகில் பயணம் செய்யும் ஓர் ஆன்மாவின் செபம் மூலம் இன்னொரு ஆன்மாவின் மரணத்திற்குப் பின்னையச் சுத்திகரிப்புக்கு புனிதத்துவத்துக்கு உதவமுடியும் எனத் திருத்தந்தை மேலும் கூறினார் .








All the contents on this site are copyrighted ©.