2008-11-03 18:31:59

  மரித்த கர்தினால்கள் ஆயர்களுக்கு நிகழ்த்திய திருப்பலியில் திருத்தந்தையின்

மறையுரை . 03 நவம்பர் , 08 .


வாழ்வின் கடவுளாம் நம் இறைவனைச் சார்ந்தே நாம் வாழ்கிறோம் , இருக்கிறோம் , இயங்குகிறோம் என்ற புனித பவுலின் வார்த்தைகளுடன் இத்திங்களன்று காலை திருப்பீடத்தில் தூய பேதுரு பசிலிக்காவில் இறந்த திருச்சபைத் தலைவர்களுக்கான திருப்பலியில் மறையுரையாற்றினார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் . கடந்த ஓராண்டு காலத்தில் உயரிழந்துள்ள கர்தினால்கள் மற்றும் ஆயர்களின் ஆன்மா இளைப்பாற்றிக்காக இத்திங்கள் காலை தூய பேதுரு பசிலிக்காப் பேராயத்தில் திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை உண்மையான வாழ்வு முடிவற்ற வாழ்வு என்பது இவ்வுலகிலேயே தொடங்கிவிடுகிறது . அதேவேளை இவ்வுலகைப் பொறுத்தவரையில் நாம் அனைவரும் படைப்புக்களேயன்றி, கடவுள் எனும் படைப்பாளிகள் அல்லர் என்பதை நினைவில் கொண்டு வாழ வேண்டும் என்றார் . நாம் இறைவனோடு ஒன்றிணைந்து இருப்பதற்கு முதலில் அவருக்கும் நமக்கும் இடையேயான வேறுபாட்டை அறிந்துகொள்ளுதல் அவசியம் எனவும் கூறினார் திருத்தந்தை . இவ்வுலக வாழ்வின் இறுதியில் இறந்து பிறிதொரு வாழ்வுக்குப் பிறக்கும் நாம் இயேசுவின் இரக்கம் நிறை இதயத்தில் நீண்ட ஆறுதலையும் ஓய்வையும் பெறுவோம் எனக்கூறிய திருத்தந்தை கடந்த 12 மாதங்களில் உயிரிழந்த கர்தினால்கள் மற்றும் ஆயர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்காகச் செபிக்குமாறு அழைப்பு விடுத்தார் . கடந்த ஓராண்டு காலத்தில் திருச்சபையில் 10 கர்தினால்கள் உயிரிழந்துள்ளனர் .








All the contents on this site are copyrighted ©.