2008-11-02 18:07:35

புனித மார்ட்டின் போரஸ் . இவர் வாழ்ந்த காலம் கி.பி.1579-1629.


பெரு நாட்டின் லீமா நகரில் இவர் பிறந்தார் . தந்தை ஸ்பெயின் நாட்டின் உயர்குலத்தைச் சேர்ந்தவர் . தாய் நீக்ரோ வகுப்பினர் . இளம் வயதிலேயே மருத்துவத்தில் ஆர்வம் காட்டினார் . அதன் வழியாக ஏழைகளுக்கு பெரிதும் உதவினார் . தொமினிக்கன் துறவறச் சபையில் சேர்ந்தார் .தேவ நற்கருணையில் ஆழ்ந்த பக்தி கொண்டிருந்தார் . செபம் , தவம் , நோயாளிகளுக்கு உதவி ,ஏழைகளுக்குத் தொண்டு , மறைக்கல்வி கற்றுக்கொடுத்தல் இவை அனைத்திலும் அக்கறை காட்டினார் . நோயாளிகளைத் தொட்டுக் குணமாக்கும் ஆற்றல் பெற்றிருந்தார் . விலங்குகளையும் அன்பு செய்தார் . தம் எடுத்துக்காட்டான வாழ்வாலும் , நன்மை புரிவதாலும் , இனிய சொற்களாலும் மக்களை இறைவன்பால் கவர்ந்த இவருடைய இலட்சியங்களை நாமும் பின்பற்றுவோம் .







நம் சிந்தனைக்கு - வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் . இவ்வுலகத்தில் வாழவேண்டிய முறைப்படி வாழ்கின்றவன் மேலுகில் உள்ள வானவர்களுள் ஒருவனாக மதிக்கப்படுவான் .








All the contents on this site are copyrighted ©.