2008-11-01 20:36:34

புனிதர்களின் உறவு நம் அச்சத்தைப் போக்குகிறது என்கிறார் திருத்தந்தை. 01 நவம்பர் , 08 .


ஒவ்வொரு புனிதரும் தங்கள் மனநிலை ஆளுமைத்தன்மையிலும் ஆன்மீக தனி வரங்களிலும் ஒருவருக்கொருவர் வேறுபட்டு நின்றாலும் அனைவரும் இயேசுவின் அன்பின் பதிப்புக்களாகவும் சிலுவையின் சாட்சிகளாகவும் ஒன்றிணைந்து நின்றார்கள் என இச்சனியன்று அனைத்துப் புனிதர்களின் விழாவையொட்டி நண்பகல் மூவேளை ஜெப உரை வழங்கினார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் . பல்வேறு துன்ப வேதனைகளையும் , துன்பச் சோதனைகளையும் உயிர்த்தியாகங்களையும் கடந்து சென்றே புனிதர்கள் இயேசுவின் மகிழ்வால் பங்கு கொண்டுள்ளார்கள் என்பதையும் நினைவூட்டினார் திருத்தந்தை . 609 ஆம் ஆண்டிலேயே உரோம் நகரில் திருத்தந்தை நான்காம் பொனிபாஸ் பாந்தியன் என்ற உரோமையரின் பழங்காலக் கோவில் இருந்த இடத்தில் , புதுப்பிக்கப்பட்ட ஆலயம் ஒன்றை அன்னைமரிக்கும் அனைத்து மறைசாட்சிகளுக்கும் என அர்ப்பணித்ததை சுட்டிக்காட்டிய பாப்பிறை இம்மறைசாட்சிகள் இறைவன் மற்றும் தங்கள் சகோதரர் மீதான அன்பிற்காக அனைத்தையும் துறந்தார்கள் என்றார் திருத்தந்தை .எளிய உள்ளத்தோராய் தூய இதயத்தோராய் நீதியின்மீது தாகமுடையோராய் அமைதிக்காக உழைப்போராய் நீதிக்காக துன்பங்களை அனுபவிப்பவர்களாக திருச்சபையின் புனிதர்கள் வாழ்ந்தார்கள் என மேலும் கூறிய பாப்பிறை புனிதர்களின் குடும்பத்தோடு நாமும் ஒன்றிணைந்து இறைவரத்தை வேண்டுவோம் என அழைப்பு விடுத்தார் .








All the contents on this site are copyrighted ©.