2008-10-31 11:11:08

திருப்பீட பாப்பிறை விஞ்ஞானக் கழக உறுப்பினர்கள் திருத்தந்தையைச் சந்தித்தனர் . 31 அக்டோபர் , 08 .


பாப்பிறை விஞ்ஞானக் கழக உறுப்பினர்களுக்கு இந்த வியாழன் காலையில் திருத்தந்தை உரை வழங்கினார் . அவர்களது பொது அமர்வுக்காகக் கூடியிருந்தனர் . கழகத்தின் சார்பாக பேராசிரியர் நிக்கோலா காபிபோ திருத்தந்தைக்கு தொடக்கத்தில் வாழ்த்துரை வழங்கினார் . உலகமும் வாழ்வும் உருவானது பற்றி விஞ்ஞான ரீதியாக மெய்ப்பொருள் காணுதல் என்ற தலைப்பில் ஆய்வு செய்யவுள்ளனர் . இது அனைவரையும் கவரக்கூடிய தலைப்பு என்றார் திருத்தந்தை . கத்தோலிக்க விசுவாசம் காட்டும் உண்மைகளும் விஞ்ஞானமும் கருத்து ஒற்றுமை கொண்டுள்ளதாதத் திருத்தந்தை கூறினார் . உலகம் உருவாகி படிப்படியாக வளர்ச்சி காண்கிறது என்பதும் கடவுள் அதற்கு ஆதாரமாக உள்ளார் என்பதும் மாறுபட்ட கருத்துக்கள் அல்ல எனக் கூறினார் திருத்தந்தை . வளர்ச்சி பெறுவதற்கு முன்னர் உலகம் இருத்தல் வேண்டும் என்பதைத் திருத்தந்தை வலியுறுத்திக் கூறினார் . விஞ்ஞானம் காணும் உண்மை கடவுள் என்ற உண்மையில் பங்கேற்பது என முந்நாள் திருத்தந்தையின் கருத்தை எடுத்துக்கூறி, வந்திருந்த அனைவருக்கும் ஆசி வழங்கினார் திருத்தந்தை .








All the contents on this site are copyrighted ©.