2008-10-30 18:58:18

குருமாணவர்கள் பயிற்சி பற்றிய செய்தி வழங்கினார் . 30அக்டோபர். 08.


திருப்பீட கத்தோலிக்கக் கல்விக்கான மன்றத் தலைவர் கர்தினால் சேனன் குரோசோவ்லவ்ஸ்கி . இன்றைய உலகில் திருச்சபையில் குருக்களாகப் பணியாற்ற, உளநலப் பயிற்சி தேவைப்படுவதாகக் கர்தினால் சேனன் கூறினார் . குருமாணவர்களின் பயிற்சிக்காக வெளியிடப்படும் கையேடு உளவியல் , இறையியல் , ஆன்மீகம் ஆகியவற்றுக்குள்ள தொடர்புகளையும் தாக்கங்களையும் பற்றி விரிவாகக் கூறிட முடியாது . சமூக , கலாச்சாரச் சிந்தனைகள் எவ்வாறு தாக்கம் தருகின்றன என இத்திரட்டில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது . அதற்கேற்புடைய முறையில் இக்காலக் குருமாணவர்கள் தயாராக இருக்க வேண்டியுள்ளது எனக் கூறினார் கர்தினால் சேனன் . தேவ அழைத்தல் கடவுள் தரும் கொடை. அதைச் சரியான முறையில் ஆய்ந்து தெளிவுபெற வேண்டும் . திருச்சபையில் பணி செய்ய உள்ளதால் இதனைத் திருச்சபையும் கவனிக்கவேண்டும் . கற்றுக்கொடுப்போர் திறமைமிக்கவர்களாக இருக்கவேண்டும் எனவும் கர்தினால் சேனன் கூறினார் . குருமாணவர்கள் திருப்பணி வாழ்வுக்குத் தகுதியுள்ளவர்களா என ஆய்ந்தறியவும் வேண்டும் . குரு மாணவர்களின் நல்ல ஒத்துழைப்பும் தேவை எனக் கர்தினால் சேனன் கத்தோலிக்கக் குருமாணவர்கள் கல்வித்திரட்டுப் பற்றிக் கூறினார் .








All the contents on this site are copyrighted ©.