2008-10-28 15:09:53

காங்கோவில் நடைபெறும் கடும் சண்டை காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேறி வருகின்றனர்


அக்.28, 2008. காங்கோ ஜனநாயக குடியரசின் கிழக்கு பகுதியில் அரசுப் படைகளுக்கும் கிளர்ச்சிக் குழுவிலிருந்து பிரிந்து சென்ற தளபதியான லாரண்ட் என்குண்டாவின் ஆட்களுக்கும் இடையே நடைபெறும் கடும் சண்டை காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களது இருப்பிடங்களை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று மறைபோதக செய்தி நிறுவனம் அறிவித்தது.

கிம்பும்பா கிராமத்துக்கு அருகில் இருந்த இடம் பெயர்ந்தவர்களுக்கான முகாமலிருந்த 20 ஆயிரம் பேரும் அதைவிட்டு வெளியேறியுள்ளனர் என்றும், அங்கிருந்த மக்கள் அந்தப் பிராந்தியத்தின் தலைநகரான கோமாவை நோக்கி இடம்பெயரத் தொடங்கியுள்ளனர் என்றும் அச்செய்தி நிறுவனம் அறிவித்தது

அரசுக்கும் பல்வேறு புரட்சி குழுக்களுக்குமிடையே கடந்த ஜனவரி இறுதியில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டிருந்தாலும் என்குண்டா புரட்சி குழு ஆயுதங்களைக் கைவிடுவதற்கு மறுத்தே வந்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் இறுதியில் அப்பகுதியில் மீண்டும் சண்டை தொடங்கியதால் ஏற்கனவே ஏறத்தாழ 2 இலட்சம் பேர் வீடுகளைவிட்டு வெளியேறியுள்ளனர். கடந்த செப்டம்பர் இறுதியில் அப்பகுதியிலுள்ள கத்தோலிக்க மறைப்பணித்தளம் ஒன்று சூறையாடப்பட்டு அழிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது







All the contents on this site are copyrighted ©.