2008-10-28 15:03:08

உலகில் ஏறத்தாழ 100 கோடிப் பேர் பசியால் வாடுகின்றனர் – ஐ.நா. மனித உரிமைகள் அதிகாரி.


அக்.28, 2008 உலக அளவில் ஏற்பட்டுள்ள உணவுப் பிரச்சனையால் ஏறத்தாழ 100 கோடிப் பேர் பசியால் வாடும் வேளை, இப்பிரச்சனையை மனித உரிமைகள் கண்ணோட்டத்தில் அணுகுமாறு ஐ.நா. மனித உரிமைகள் வல்லுனர் ஒலிவியர் தெ ஷூட்டெர் கேட்டுள்ளார்.

உலக அளவில் உணவுப் பொருட்களின் விலை குறைந்திருந்தாலும் விலைவாசி ஏற்றத்தால் ஏற்பட்ட பிரச்சனை இன்னும் குறையவில்லை என்று நியுயார்க்கில் நிருபர்களிடம் கூறினார்.

உண்மையான பசிப் பிரச்சனை போதுமான உணவுப் பொருட்கள் விநியோகிக்கப்படாததால் ஏற்படுவது அல்ல, மாறாக மக்கள் அதனை வாங்குவதற்கு வசதியின்றி இருக்கின்றனர் என்றும் ஐ.நா. அதிகாரி கூறினார்.

 








All the contents on this site are copyrighted ©.