2008-10-28 15:02:08

உலகப் பொருளாதாரத்தை நிலைநிறுத்த புதிய யுக்தி ஒன்றை முன்வைத்துள்ளார் கர்தினால் மர்த்தீனோ


அக்.28, 2008. மனிதன் மற்றும் மனித சமுதாயத்தின் நலனை மறந்துள்ள உலகப் பொருளாதார மற்றும் நிதி அமைப்புக்கு புதிய யுக்தி ஒன்றை முன்வைத்துள்ளார் வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர்.

தற்போதைய உலகளாவிய நிதி நெருக்கடி பிரச்சனை குறித்து உரோமையில் பல்வேறு நாடுகளின் நிபுணர்களுடன் ஐ.நா..வின் பொருளாதார மற்றும் சமூக விவகாரத்துறை இயக்குனர் ஆஸ்கார் தெ ரோகாஸ் நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்த, திருப்பீட நீதி மற்றும் அமைதி அவைத்தலைவர் கர்தினால் ரெனாத்தோ மர்த்தீனோ, உலகப் பொருளாதார மற்றும் நிதி அமைப்பில் மனிதன் மற்றும் மனித சமுதாயத்தின் நலனுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்றார்.

பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அரசுகள் வளர்ச்சி குறித்தத் தங்களின் வாக்குறுதிகளைத் தொடர்ந்து செயல்படுத்துமாறும் தான் கேட்டுக் கொண்டதாக கர்தினால் தெரிவித்தார்.

இக்கூட்டமானது நாளை கத்தார் நாட்டு தோகாவில் தொடங்கும் சர்வதேச கூட்டத்திற்குத் தயாரிப்பாக நடத்தப்பட்டது.








All the contents on this site are copyrighted ©.