2008-10-28 15:06:35

இலங்கையில் சண்டை இடம் பெறும் பகுதியில் மக்களின் நிலைமையை உணர்ந்த எவரும் போரை விரும்பமாட்டார்கள்


அக்.28, 2008. இலங்கையின் வடக்குப் பகுதியின் நிலைமை எவ்வளவு மோசமாக உள்ளது என்பதை மக்கள் அறிந்திருந்தால் அவர்கள் சண்டைதான் தீர்வு என்று கூறமாட்டார்கள் என்று இலங்கை கிறிஸ்தவ தோழமை இயக்க நிறுவுனர் அருட்திரு சாரத் இட்டமால்கோடா கூறினார்.

இலங்கை இராணுவத்துக்கும் தமிழ் விடுதலைப் புலிகளுக்குமிடையே சண்டை இடம் பெற்று வரும் பகுதியில் வாழும் மக்கள் மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள் என்று அருட்திரு சாரத் மேலும் கூறினார்.

போரினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு நிருபர்கள் செல்வது தடை செய்யப்பட்டிருப்பதிலிருந்து பகுதியின் நிலவரம் எவ்வளவு மோசமாக உள்ளது என்பதை

யூகிக்க முடிகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கென மேற்கு மாவட்டங்களிலிருந்து திரட்டப்பட்டுள்ள 80 ஆயிரம் ரூபாயை மன்னார் ஆயரிடம் நவம்பரில் கொடுக்கவிருப்பதாகவும் அருட்திரு சாரத் கூறினார்.

மேலும், போரினால் பாதிக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்களுக்கு தமிழக மக்கள் தங்களால் இயன்ற நிதியுதவி மற்றும் உணவு, உடைகளை வழங்கி உதவிடுமாறு முதலமைச்சர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ்நாடு அரசு - மத்திய அரசு அளித்துள்ள அனுமதியின் அடிப்படையில் அனுப்ப இருக்கும் நிவாரண பொருள்கள் - இலங்கையில் சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம், ஐக்கிய நாடுகள் மன்றம் மற்றும் மத்திய அரசு ஆகியவற்றின் மூலம் விநியோகத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே கடும் மழை மற்றும் சகதிகள் மத்தியில் சண்டை வலுத்து வருவதாக இலங்கை இராணுவம் இன்று அறிவித்தது.

தமிழ்நாடு அரசு - மத்திய அரசு அளித்துள்ள அனுமதியின் அடிப்படையில் அனுப்ப இருக்கும் நிவாரண பொருள்கள் - இலங்கையில் சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம், ஐக்கிய நாடுகள் மன்றம் மற்றும் மத்திய அரசு ஆகியவற்றின் மூலம் விநியோகத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

 








All the contents on this site are copyrighted ©.