2008-10-27 18:57:16

ருவாண்டா நாட்டு இராணுவ அதிகாரிகளுக்குச் சிறைத்தண்டனை. 27அக்டோபர்.08.


ருவாண்டா நாட்டில் 15 கத்தோலிக்கக் குருக்களைக் கொன்றது உட்பட பல்வேறு குற்றங்களுக்காக அந்நாட்டின் 2 இராணுவ அதிகாரிகளுக்கு எட்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 1994 இல் நடத்தப்பட்ட போர்க் காலக் குற்றங்களுக்காக கிகாலியின் இராணுவ நீதி மன்றம் இத்தண்டனையை வழங்கியுள்ளது. கத்தோலிக்கக் குருக்களைக் கொன்றதாக இந்த இராணுவ அதிகாரிகள் ஒப்புக் கொண்ட நிலையில் ஏற்கனவே திட்டமிடப்பட்ட கொலை இவர்களுக்குக் கீழ் பணிபுரிந்த இராணுவ வீரர்களால் நிகழ்த்தப்பட்டது என்பதால் இச்சிறிய தண்டனையை வழங்குவதாக இராணுவ நீதிமன்றம் தெரிவித்தது.








All the contents on this site are copyrighted ©.