கத்தோலிக்கத் திருச்சபையின் திருமணத் துறவுக்கு வத்திக்கான் மனநல நிபுணர் ஆதரவு . 23
அக். 08 .
அருள் தந்தையருக்கான வத்திக்கான் திருப்பீட மன்றத்தின் உளநல நிபுணராக இருப்பவர் டாக்டர்
மாண்பிரட் லுட்ஸ் . மேலெழுந்தவாரியாக வாழ்வோருக்கும் மறுவாழ்வில் நம்பிக்கை இல்லாதோர்க்கும்
எதிராக இருப்பது மணத்துறவு என அவர் கூறியுள்ளார் . திருமணத் துறவு இயல்பானது அல்ல என்பவர்களுக்கு
இவ்வுலகில் நம் வாழ்வில் நாம் காணும் இன்பமும் துன்பமும் மட்டும்தான் வாழ்வில் எல்லாமுமாக
நாம் கொள்ள முடியாது என்கிறார் உளநல நிபுணர் . மறு வாழ்வு என்பது ஒன்று உண்டு எனக் கூறுகிறார்
. பாலியியல் வாழ்வைத் துறக்க இயலாத ஒருவர் திருமணவாழ்வுக்கும் அருகதை அற்றவர் என உளவியல்
நிபுணர் மாண்பிரட் லுட்ஸ் கூறியுள்ளார்.