2008-10-22 16:16:41

விவிலியம், கிறிஸ்தவ ஒன்றிப்பு உரையாடலுக்கு முக்கியமான கருவி – கர்தினால் காஸ்பர்


அக்.22,2008. விவிலியம், கிறிஸ்தவ ஒன்றிப்பு உரையாடலுக்கு அடித்தளமாகவும், முக்கியமான கருவியாகவும் இருக்கின்றது என்று திருப்பீட கிறிஸ்தவ ஒன்றிப்பு அவைத்தலைவர் கர்தினால் வால்ட்டர் காஸ்பர் இன்று கூறினார்.

12வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் இன்றைய காலை அமர்வில் சமர்ப்பிக்கப்பட்ட கர்தினால் காஸ்பரின் உரை, அனைத்துக் கிறிஸ்தவர்களும் நடைமுறைபடுத்தி வரும் லெக்சியோ திவினா என்ற திருமறை நூலை வாசித்து தியானித்து பொருள் விளக்கம் சொல்லி செபிக்கும் முறை கடந்த பத்து ஆண்டுகளில் மிகுந்த பலனைத் தந்திருக்கின்றது என்று கூறுகிறது.

கிறிஸ்தவ சபைகள் ஒன்றிணைந்து வர உதவும் தூய ஆவிக்கு நாம் நன்ற்யுல்ளவர்களாக இருப்போம் என்றும் அவரின் உரை தெரிவிக்கின்றது.

இன்னும் இம்மாமன்றத்தில் இன்றைய காலை அமர்வில் சமர்ப்பிக்கப்பட்ட குரோவேஷிய நாட்டு தால்மஸியா ஆயர் ராட் ஸ்லாதோஜேவிச்போட்டிஜேயின் உரை, இன்றைய நவீன உலகுக்கு திருமறை நூலுக்குச் சாட்சி சொல்லக்கூடியவர்கள் தேவைப்படுகிறார்கள் என்றார்.

மேலும், உலக ஆயர்கள் மாமன்றச் செயலர் பேராயர் நிக்கோலா எத்தெரோவிச், இம்மாமன்றம் உருவாக்கப்பட்டதன் 40ம் ஆண்டையொட்டி அதன் தொடக்க முதல் 1988ம் ஆண்டு வரை நடைபெற்ற இம்மாமன்ற தொகுப்புகள் அடங்கிய ஏட்டை வெளியிட்டார்.

திருச்சபையின் வாழ்விலும் பணியிலும் இறைவார்த்தை என்ற தலைப்பில் வத்திக்கானில் நடை பெற்று வரும் 12வது உலக ஆயர்கள் மாமன்றம் வருகிற ஞாயிறன்று நிறைவு பெறும்.








All the contents on this site are copyrighted ©.