2008-10-21 13:53:21

திருமறை நூலில் பொதுநிலையினர்க்குப் பயிற்சி அவசியம் – ஆயர்கள் மாமன்றப் பிரதிநிதிகள்


அக்.21,2008. திருச்சபையின் வாழ்விலும் பணியிலும் இறைவார்த்தை என்ற தலைப்பில் வத்திக்கானில் நடை பெற்று வரும் 12வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் இன்றைய காலை பொது அமர்வு திருத்தந்தை 16ம் பெனடிக்டின் முன்னிலையில் தொடங்கியது.

இவ்வமர்வில் பேசிய பேரவை பிரதிநிதிகள், பொதுநிலையினரின் உருவாக்கம் பற்றிப் பேசினர். கத்தோலிக்கத் திருச்சபையின் மறைக்கல்வி ஏடு, ஞாயிறு திருப்பலி வாசகங்கள், கத்தோலிக்க விசுவாசத்திற்கும் திருமறை நூலுக்குமிடையேயான உறவு ஆகியவை பற்றிய பயிற்சிகள் பொதுநிலையினருக்கு வழங்கப்பட வேண்டும் என்று அவர்கள் மேலும் கூறினர்.

பொதுநிலையினருக்கு இறைவார்த்தை பற்றிய பயிற்சிகள் வழங்கப்படும் போது அதை அவர்கள் தங்கள் குடும்பத்திலும் பொது வாழ்விலும் கடைபிடிப்பதற்கு உதவியாக இருக்கும் என்றும் 243 பிரதிநிதிகள் பங்கு கொண்ட காலை பொது அமர்வில் அவர்கள் பரிந்துரைத்தனர்.

பேரவை பிரதிநிதிகள் இன்று முற்பகல் மற்றும் மாலையில் குழுக்களாகப் பிரிந்து செயல்பட்டனர்







All the contents on this site are copyrighted ©.