2008-10-21 19:09:05

காஷ்மீர் பாகிஸ்தான் சாலை 60 ஆண்டுகளுக்குப் பிறகு திறப்பு.21 அக்டோபர் 08.


அணுசக்தித் திறன் கொண்ட இரு பெரும் வல்லரசுக்கள் உறவை வலுப்படுத்துகின்றனர். பல ஆண்டுகளாகப் பிரச்சனைக்குரிய பகுதியில் , கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கூட மோதல்கள் இடம் பெற்ற காஷ்மீர் பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் சுதந்திரமாக வாணிபம் நடைபெற வாய்ப்பு உதயமாகியுள்ளது . ஆண்டுக்கு 6 பில்லியன் டாலர்கள் எனப் பல கோடி ரூபாய் வாணிபம் பெருக வாய்ப்புள்ளது . இந்தியாவும் பாகிஸ்தானும் 1947-1948 ஆம் ஆண்டு மோதலுக்குப் பிறகு எல்லைக் கோட்டைத் தாண்டி வாணிபத்தைத் தொடர ஒப்பந்தம் செய்துள்ளனர் .நெடுஞ்சாலை திறந்துவிடப்பட்டது. அப்பாதை 58 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்தது . இந்தியாவின் காஷ்மீரின் தலைநகர் ஸ்ரீநகரையும் பாகிஸ்தானின் முசாபராபாத்தையும் 170 கிலோ மீட்டர் சாலை இணைக்கிறது. இரு பகுதியையும் இணைக்கும் பாலம் காஷ்மீர மொழியில் அமைதிப் பாலம் என அழைக்கப்படுகிறது . 2005 ஆம் ஆண்டு ஒப்பந்தத்துக்குப் பிறகு 5 இடங்களில் பாதைகள் திறந்துவிடப்பட்டது குறிப்பிடத் தக்கது. இந்த இரு நாடுகளும் ஒற்றுமைக்கு எடுக்கும் முயற்சிகளில் இது ஒரு முன்னேற்றப் படியாகும் . இரு நாடுகளுக்கிடையேயும் வாணிபம் தொடரட்டும் என்ற வாசகங்களோடு பழங்களையும் தேனையும் ஏற்றிக் கொண்டு இந்தியச் சரக்கு வாகனங்கள் இன்று காலை இந்தியாவின் சாலமாபாத்திலிருந்து பாகிஸ்தானை நோக்கிக் கிளம்பின .








All the contents on this site are copyrighted ©.