2008-10-21 20:47:00

உலக ஆயர்கள் மாமன்றத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டுப் பிரதிநிதியின் உரை. 21 அக். 08


பிலிப்பைன்ஸ் நாட்டின் விவிலிய மறைப்பணியில் துணைத் தலைவராக இருப்பவர் திருமதி எல்வீரா கோ என்பவர் . பிலிப்பைன்ஸில் தேசியக் குடும்ப விவிலியப் பணியில் ஆர்வமாகப் பணிசெய்பவர் . விவிலியத்தில் வினா விடை வழியாக விவிலியக் கருத்துக்களை மக்கள் மனத்தில் பதியச் செய்பவர் . இதனை அவர் ஒரு பொழுது போக்காகவும் , ஒரு மாற்றத்திற்காகவும், தூய ஆவியால் தூண்டப்பட்ட ஒரு சவாலாகவும் ஏற்றுச் செயல்புரிந்து வருகிறார் . 1997 இல் அவரது இறை நம்பிக்கை தூய ஆவியானவரால் மீண்டும் எழுப்பப்பட்டதாகக் கூறினார் . இந்த இறை அனுபவம் அவர் வாழ்வில் பல வியப்புக்குரிய செயல்களுக்குக் காரணமாக அமைந்ததாக அவர் மேலும் கூறினார் . அவருடைய வினா விடை விவிலியக் கல்வியால் பலரது வாழ்வில் நல்ல மாற்றம் பெற்றுள்ளதாகத் திருமதி எல்வீரா எடுத்துக் கூறினார் . இறைவாக்கு கேட்போரை சிந்திக்க வைத்து மாற்றத்தைக் கொண்டு வருவதாகவும் , நல்ல உறவுகளை உருவாக்குவதாகவும் , இறைவாக்கைப் பரப்பிடத் தூண்டுகோலாக அமைவதாகவும் அவர் மேலும் கூறினார் . பலர் இந்தப் பணியில் பங்கேற்று தாராள மனத்தோடு உதவுகின்றனர் . எனினும் இப்பணியைத் தொடர்வது ஒரு சவால் எனக் கூறினார் . இறைவாக்கு உயிரூட்டி விவிலிய ஆன்மீகத்தைத் தருவதாகவும் விடாது இப்பணியைத் தொடர்வது சவால்களை எதிர்கொள்வதென்றும் திருமதி எல்வீரா கோ, உலக ஆயர்கள் மாமன்றத்தில் கருத்துப் பறிமாறியுள்ளார் .








All the contents on this site are copyrighted ©.